Flash News...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,நாகை நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழு

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்ததாவது:
முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
3.5 சதவிகிதம் என்பது போதுமானதல்ல. எனவே முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல்,  அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில செயற்குழுவைக்கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்ககப்படும் என்று கூறினார்.
மேலும் பல பொதுக்குழு தீர்மாணங்கள் குறித்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். நன்றி tntj.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக