Flash News...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,நாகை நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...

வியாழன், 29 செப்டம்பர், 2011

மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் (நாகூர்)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 25-09-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்களும் உரையாற்றினர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,

(நன்றி - TNTJ.Net)

திங்கள், 12 செப்டம்பர், 2011

நாகப்பட்டிணம் கிளையில் ரூபாய் 45150 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 261 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 45150 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

நாகப்பட்டிணம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

வியாழன், 8 செப்டம்பர், 2011

நோன்பு பெருநாள் (திடல்) தொழுகை நாகூர் 31-8-201

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

திங்கள், 28 மார்ச், 2011

நாகை மர்க்கஸில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்

இன்ஷா அல்லாஹ்  வருகிற ஏப்ரல் 3ம் தேதி நாகை மர்க்கஸில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற உள்ளது, சகோதரர் அப்துந்நாசிர் அவர்கள் உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்கள். சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு  பயன் பெருமாறு அன்புடன்  கேட்டு கொள்கிறோம்

புதன், 23 மார்ச், 2011

TNTJ அவசரப் மாநில பொதுக்குழு 26-3-11 சனிக்கிழமை கூடுகிறது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் வெளியிடாததாலும் கூட்டணிகள் முடிவாகாததாலும் அப்போது முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.
இதன் பின்னர் நடத்தப்பட்ட மாநில செயற்குழுவின் போதும் அரசியல் நிலைமை தெளிவாகாமல் இருந்தது. ஆனால் தற்போது கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.
மேலும் தேர்தல் அறிக்கையும் பெரும்பாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாநிலப் பொதுச் சேயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 நன்றி TNTJ.Net 

திங்கள், 7 பிப்ரவரி, 2011

நாகை மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்துடன் காரைக்கால் துறைமுகம் மற்றும் அரசு தரப்பு பேச்சு வார்த்தை...



 காரைக்கால் (வாஞ்சூர்) துறைமுகம் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை தடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டுள்ளது (Tntj Nagai South) 

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

காரைக்கால் (வாஞ்சூர்) துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி  செய்யபடும் நிலக்கரி காற்றில்  கலந்து நாகூர்  பகுதி சுற்று புற சூழலை பாதிப்பதை கண்டித்து மாபெரும் பேரணி  & கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ் 8-02-11 செவ்வாய்கிழமை அன்று காலை 11 மணி அளவில்  பேரணி நாகூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, சுகாதார சீர்கேட்டை கண்டித்து குரல் கொடுக்க சகோதர, சகோதரிகள் அனைவரும்  வருக என அன்புடன் அழைக்கிறது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் கிளை (நாகை தெற்கு மாவட்டம்)

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழு

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்ததாவது:
முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
3.5 சதவிகிதம் என்பது போதுமானதல்ல. எனவே முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல்,  அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில செயற்குழுவைக்கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்ககப்படும் என்று கூறினார்.
மேலும் பல பொதுக்குழு தீர்மாணங்கள் குறித்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். நன்றி tntj.net

வெள்ளி, 28 ஜனவரி, 2011

நாகையில் ரூபாய் 7810 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் மற்றும் நாகூர் கிளை சார்பாக கடந்த 7-1-11 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 7810 வழங்கப்பட்டது.

நன்றி tntj.net

வியாழன், 13 ஜனவரி, 2011

திட்டச்சேரி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளையில் கடந்த 9-1-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜாஃபர் சாதிக் உரையாற்றினார்கள்.பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

திட்டச்சேரியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் கடந்த 2-1-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிறக்கும் ஜனவரி 27 போராட்டம் குறித்து தினத்தந்தி (தஞ்சாவூர் பதிப்பு) பத்திரிக்கையில் கடந்த 7-1-11 அன்று செய்தி வெளியாகியுள்ளது. போராட்டக்குழு தலைவர் சைபுல்லாஹ்ஹாஜா அவர்கள் நாகூரில் அளித்த பேட்டி இதில் இடம் பெற்றுள்ளது.



புதன், 8 டிசம்பர், 2010




அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27 ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27 ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.
சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.
நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதை விட இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4ம் தேதியன்று சென்னையிலும் மதுரையிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்பை ஆட்சேபணை செய்யும் வகையில் ஆர்ப்பரித்து எழ தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது.


வெள்ளையன் ஆட்சியில்
பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் ஆள்வோரும் அதிகார வர்க்கமும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வந்ததை முஸ்லிம் சமுதாயம் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளது.
ஆனால் அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் மிஞ்சும் வகையில் நீதிமன்றங்களும் தவறு இழைக்கும் என முஸ்லிம் சமுதாயம் அறிந்து கொள்ளவில்லை.
நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்ற அறியாமை காரணமாகவும்,  நீதி மன்றத்தின் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வோம் என்று சில முஸ்லிம் இயக்கங்கள் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவும் நீதி மன்றங்களின் நியாயங்கள் முஸ்லிம் சமுதாயத்துக்குச் சென்றடையவே இல்லை.
நீதிமன்றங்கள் இப்போதுதான் முதன் முதலில் தவறாகத் தீர்ப்பளித்து விட்டது போலவும், அதற்கு முன்பு நீதிமன்றங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையான முறையில் நடந்து கொண்டது போலவும் என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை என்ன? பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் அனைத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றங்கள் மத உரிமை, உணர்வு ஆகியவைகளுக்கு விரோத மாகத்தான் தீர்ப்பு வழங்கி வந்துள்ளன.
நீதிமன்றங்கள் எத்தகைய தவறான தீர்ப்புகளை வழங்கினாலும் ஏமாந்த முஸ்லிம் சமுதாயம் அதைக் கண்டு கொள்ளாது என்று நீதி மன்றங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த விபரீதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவை தான்; அவை அநீதி இழைக்குமானால் அவை கண்டனத்திற்குரியவைதான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தினால்தான் எதிர் காலத்தில் மதவெறி பிடித்து சட்டத்தை மீறும் நீதித்துறைக்கு எச்சரிக்கையாக அமையும்.
இதற்காகத்தான் ஜனவரி 4ம் தேதியன்று நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்புக்கு எதிராக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ய உங்களை அழைக்கிறோம்.


உரிமை காத்த வெள்ளையர்கள்!
பாபர் மஸ்ஜித் குறித்து நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையர் ஆட்சியி லும் வழக்குகள் தொடரப்பட்டன. முதல் வழக்கு
மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் 61/280/1885 என்ற வழக்கு தொடுத்தார். பாபர் மஸ்ஜிதுக்கு அல்லது அதைச் சுற்றியுள்ள சொத்துகளுக்கு உரிமை கோரி அந்த வழக்கு தொடரப்பட வில்லை. பாபர் மஸ்ஜித்துக்குச் சொந்தமான காலி இடத்தில் ராமர் பாதம் உள்ளது. அந்த இடத்தில் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள். எனவே அந்த இடத்தில் மேற்கூரை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு.
அந்த வழக்கில் கோரப்பட்ட இடம் 21 X 17 = 357 சதுர அடி. பாபர் மஸ்ஜிதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தில் வழக்குத் தொடுத்தவர் சொந்தம் கொண்டாடியது 357 சதுர அடிதான். ஒரு செண்டுக்கும் குறைவான இடத்தின் மீது கட்டடம் கட்டத்தான் அனுமதி கேட்டு வழக்கு போடப்பட்டது.
அப்போது பைஸாபாத் நீதிபதியாக இருந்த பண்டிட் ஹரி கிருஷ்ணன் இந்த வழக்கில் பிப். 27, 1885ல் தீர்ப்பு அளித்தார்.
அந்த இடம் (357 சதுர அடி) வழக்குத் தொடுத்தவருக்குச் சொந்தமானது என்றாலும் அங்கே பள்ளிவாசல் இருந்து வருவதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பது அவரது தீர்ப்பு. மேல் முறையீடு
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மகந்த் ரகுபர் தாஸ் மேல் முறையீடு செய்தார். அப்போது பைஸாபாத் மாவட்ட நீதிபதியாக எஃப்.இ.ஏ. சேமியர் இருந்தார். இவர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து விட்டு 1886 மார்ச் 18ல் தீர்ப்பளித்தார்.
அந்த இடம் ரகுபர் தாசுக்குச் சொந்தமானது அல்ல என்று தீர்ப்பளித்ததுடன் 357 சதுர அடியில் கோவில் எழுப்பவும் தடை விதித்தார்.


இரண்டாம் மேல் முறையீடு
இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து மகந்த் ரகுபர் தாஸ் மேல் முறையீடு செய்தார். நீதிபதி டபிள்யூ. யங்க் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆவணங்களின்படியும், சட்டப்படியும் அந்த 357 சதுர அடி நிலம் தனக்குச் சொந்த மானது என்பதற்கு மகந்த் ரகுபர் தாஸ் தக்க ஆதாரம் எதையும் காட்டவில்லை எனக் கூறி அந்த வழக்கை 1886 நவம்பர் 1ல் தள்ளுபடி செய்தார்.
வெள்ளையர்கள் ஆட்சியில் வெறும் 357 சதுர அடி நிலத்திற்குக் கூட இந்துக்களுக்குச் சட்டப்படி உரிமை இல்லை என்று தெளிவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டு முழு இடமும் முஸ்லிம்களுக்கே சொந்தமானது என்று சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது.


சுதந்திர இந்தியாவில் காவி நீதிமான்கள்!
ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நாட்டு விடுதலைக்கு அதிகமதிகம் பாடுபட்ட மக்களுக்கு ஆள்வோரை மிஞ்சும் வகையில் நீதிமன்றங்கள் தொடர்ந்து அநீதியை இழைத்து வந்தன. அந்த வரலாறுகளையும், முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.

நீதிமன்ற அநீதி – 1

1949 டிசம்பர் 22ம் தேதி இரவோடு இரவாக பாபர் பள்ளியில் ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளைக் கொண்டு போய் வைத்த சமூக விரோதிகள் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர்.
ஒரு விநாடியில் அதைத் தூக்கி வெளியே போடுவது தான் சட்டப்படி செய்ய வேண்டிய காரியம் என்ற போதும் நீதிபதி அந்தஸ்தில் உள்ள கே.கே நய்யார் அதை அப்புறப்படுத்த மறுத்து உத்தரவிட்டார். நீதியின் பெயரால் நடந்த முதல் அநீதி இது. இந்த நீதிபதி பின்னாளில் ஜனசங்கம் என்ற சங்பரிவார இயக்கத் தில் சேர்ந்தார்.

நீதிமன்ற அநீதி – 2

சிலைகளை அப்புறப்படுத்தக் கோரியும், அந்த இடத்தை முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கக் கோரியும் முஸ்லிம்கள் வழக்குத் தொடுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிலைகளைக் காப்பாற்ற ரிஸீவரை நியமித்து தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. இது இரண்டாவது அநீதியாகும்.

நீதிமன்ற அநீதி – 3

1950 ஜனவரி 16 அன்று சிலைகளை அகற்றக் கூடாது என்று கோரி கோபால் சிங் விஷாரத் பைஸாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சிலைகளை அகற்றக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை உத்தரவு பிறக்கப்பட்டு மூன்றாவது அநீதி அரங்கேற்றப்பட்டது.

நீதிமன்ற அநீதி – 4

மகந்த் பரமஹம்ஸ ராமச்சந்திர தாஸ் என்பவர் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை செய்ய அனுமதி கேட்டு வழக்குத் தொடுக்கிறார். 1950 டிசம்பர் 5ல் இதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதாவது சட்ட விரோதமாக பள்ளிவாசலுக்குள் சிலையை வைத்து விட்டு அந்தச் சிலைகளுக்கு பூஜை செய்ய அனுமதித்ததற்கு மதவெறி தவிர வேறு சட்டக் காரணம் ஏதுமில்லை. இது காவி நீதிமான்கள் செய்த நான்காவது அநீதியாகும்.

நீதிமன்ற அநீதி – 5

இந்த வழக்கில் நிர்மோகி அகாரா என்ற அமைப்பு தன்னையும் நுழைத்துக் கொண்டது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வகையில் அது வழக்கு தொடுத்தபோது எடுத்த எடுப்பிலேயே அதைத் தள்ளுபடி செய்ய வேண்டிய நீதிபதிகள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் மூலம் ஐந்தாவது அநீதியை அரங்கேற்றினர். பாபர் பள்ளிவாசல் என்ற ஒன்று இல்லை; அது ஆரம்பம் முதல் எங்களிடம்தான் உள்ளது. கோவிலாகத்தான் இருந்து வருகிறது. பாபர் இடிக்கவும் இல்லை; மசூதி கட்டப்படவும் இல்லை. அது கோவிலாகத்தான் இருக்கிறது; இதில் முஸ்லிம்கள் இடையூறு செய்யக் கூடாது என்பதுதான் அந்த வழக்கு.
1950  டிசம்பர் 17ல் இந்த வழக்கு தொடரப் பட்டது. உண்மைக்கு மாறான இந்த வழக்கை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யாமல் இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அநீதியை நிலை நாட்டியது. (இந்த அமைப்புக்குத்தான் மூன்றில் ஒரு பங்கு என்று அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது)
முஸ்லிம்கள் தரப்பிலும், வக்ஃபு வாரியத் தின் தரப்பிலும், இந்துக்கள் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உ.பி. அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கீழமை நீதிபதிகளிடம் இருக்கும் அளவுக்கு மதவெறி மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் இருக்காது என்று முஸ்லிம்கள் குருட்டு நம்பிக்கை வைத்திருந்தனர். அதிலும் தோல்விதான்.

நீதிமன்ற அநீதி – 6

ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்கு அந்த இடத்தை அகழ்வா ராய்ச்சி செய்யுமாறு சட்டத்தில் கூறப்பட வில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் இத்தகைய சட்டம் இல்லை. ஆனால் நீதிபதிகள் சட்ட விரோதமாக அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அநீதி – 7

இந்த வழக்கை வக்ஃபு வாரியம் – பாபர் மஸ்ஜித் கமிட்டி, நிர்மோகி அகாரா என்ற அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் புதிதாக யாரும் சட்டப்படி உரிமை கோர முடியாது. ஆனால் பார்ப்பன சங்பரிவாரக் கும்பல் உலகமே காரித்துப்பும் வகையிலான கேவலமான செயல் மூலம் மேலும் சிலரை வழக்கில் நுழைத்தது. இதுதான் நடந்த அநியாயத்திலேயே மிகப் பெரியது.
ஒரு சொத்து சம்பந்தமாக வழக்குப் போடுவதாக இருந்தால் அந்தச் சொத்தில் விவகாரம் ஏற்பட்டு 12 ஆண்டுக ளுக்குள் வழக்குப் போட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மைனர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விலக்கு உண்டு.
ஒரு மைனரின் சொத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டால் அவர் 12 ஆண்டுகள் கழித்த பின்பும் வழக்குப் போடலாம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சொத்து குழந்தை ராமருக்கு உரியது. குழந்தை ராமர் காலாகாலம் மைனராவார். எனவே ராமர் என்றும் மைனராக உள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்.
மைனர் நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்பதால் அவர் சார்பில் அவரது கார்டியன் வழக்குத் தொடரலாம் என்று வாதிட்டு ராமர் பெயரில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது எனக்குச் சொந்தமான இடத்தில் பாபர் என்பவர் 450 ஆண்டுகளுக்கு முன் கோவிலைக் கட்டினார். இதற்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான் வழக்கு.
ராமர் பிறந்த இடம் மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது என்றும் அது மனித அந்தஸ்தை அடைந்து விட்டது என்றும் அந்த மைனரும் வழக்குத் தொடரலாம் என்றும் வாதிட்டு அதன் காப்பாளர் என்ற பெயரில் 1989ல் வழக்குப் போட்டு தங்களையும் வழக் கில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தியோகி நந்தன் அகர்வால் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தவர். அதாவது மைனரான ராமர் சார்பிலும், மைனரான காவி இடம் சார்பிலும் அதன் பாதுகாவலர் என்ற பெயரில் இவர் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
உலக மக்கள் இதை அறிந்தால் இந்நீதித்துறையைப் பற்றி என்ன நினைப்பார்கள். காரித்துப்புவார்களே என்ற குறைந்த பட்ச கூச்சம் இன்றி குழந்தை ராமரும், மைனர், காலி மனையும் வழக்கில் சேர்க்கப்பட்ட அதிசயம் நடந்தது.
உலக நீதிமன்ற வரலாற்றில் இதுபோன்று நீதிமன்றங்கள் செயல்பட்டிருக்காது. ஆயினும் உள்ளார்ந்த மத உணர்வின் காரணமாக இவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் கோமாளித்தனத்தின் அடிப்படையில்தான் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற அநீதி – 8

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை இல்லாமலும், உள்நோக்கத்துடனும் அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டதன் மூலமும், ராமரை வாதியாக ஆக்கியதன் மூலமும் இப்போதைய தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தனர்.
அதன் அடிப்படையில் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு, நிர்மோகி அகாராவுக்கு மூன்றில் ஒன்று, முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று எனத் தீர்ப்பளித்து மாபெரும் அநீதியை இழைத்தனர்.
அதாவது இல்லாத ராமரை வழக்கில் சேர்த்து அவரையும் அடுத்தவர் சொத்துக்கு பங்காளியாக்கி விட்டனர்.
பள்ளிவாசலே அங்கே இருக்கவில்லை. பாபர் மசூதியை இடிக்கவும் இல்லை. இது கோவிலாகத்தான் இருக்கிறது என்ற புளுகு மூட்டையை அப்படியே நம்பி அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு, பள்ளிவாசலின் உரிமையாளர்களுக்கு மூன்றில் ஒன்று. இப்படி அநியாயத் தீர்ப்பளித்த அத்தனை பேரையும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தாட்சண்ய மின்றி கண்டிக்கிறது!

நீதிமன்ற அநீதி – 9

அகழ்வாராய்ச்சி அறிக்கையில் கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறப்படாத போதும் கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலைக் கட்டினார் என்ற அவதூறை நீதிமன்றம் கூறியது ஏற்புடைய தில்லை.

நீதிமன்ற அநீதி – 10

அகழ்வாராய்ச்சியில் விலங்குகளின் எலும் புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பின்பும் அது கோவிலாக இருந்திருக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் அது கோவில்தான் என்று கூறியதன் மூலம் பத்தா வாது அநீதி அரங்கேற்றப்பட்டது.

நீதிமன்ற அநீதி – 11

எந்த இடத்தில் பள்ளிவாசலின் மையப்பகுதி இருந்ததோ அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். எனவே அது அவருக்குத்தான் சொந்தமானது என்றும் இந்த நீதிபதிகள் தவறாக தீர்ப்பளித்து விட்டனர். 18 லட்சம் ஆண்டுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அதை சிந்தனையுள்ள எவரும் ஏற்க முடியாது.

நீதிமன்ற அநீதி – 12

பாபர் பள்ளிவாசல் இஸ்லாமியச் சட்டப்படி பள்ளிவாசலே அல்ல என்று கூறிய நீதிபதி நீதி வழங்குவதில் தவறி விட்டார். இப்படி அடுக்கடுக்கான அநீதிகளைத்தான் நீதிபதிகள் பாபர் மஸ்ஜித் வழக்கில் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். எனவே இது போன்ற அநீதிகளை அம்பலப்படுத்தி நீதித்துறையை தட்டிக் கேட்கத் தவறினால் நம்முடைய பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படும். நீதி வழங்குவதில் தவறிய நீதிபதிகளைத் துணிவுடன் கண்டிக்கவும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும், எந்தப் பள்ளிவாசல் பிரச்சினையையும் நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்ல பயப்படும் நிலைமை இனியும் நீதிமன்றங்களால் ஏற்படக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தவும்,
இருக்கின்ற பள்ளிவாசல்கள் இதுபோன்று நீதித்துறையால் பறிக்கப்படாமல் இருக்க நம் முழு பலத்தையும் திரட்டி கண்டனங்களைப் பதிவு செய்வோம்.

நீதித்துறை சட்டத்தை மீறினால் நீதிமன்றங்களையும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகறியச் செய்வோம். ஜனவரி 27ல் நம் உணர்வை வெளிப்படுத்துவோம்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010